குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த புட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில் கெட்டூர், புட்டிரெட்டிப்பட்டி, இந்திரா நகர், உள்ளிட்ட, 7 குக்கிராமங்களில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். புட்டிரெட்டிப்பட்டி பழைய தெருவில், 150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி சார்பில் முறையாக குடிநீர் விடுவதில்லை. இதனால் குடிநீரின்றி பொதுமக்கள் அலையும் அவல நிலையில் உள்ளனர்.
பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், அதிகாரிகளிடமும் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. குடிநீர் இல்லாததால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். விரக்தி அடைந்த மக்கள், நேற்று மதியம் முறையான குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து, புட்டிரெட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே, காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாவட்ட கயிறு இழுக்கும் போட்டி தாம்பரம் சி.எஸ்.ஐ., பள்ளி தங்கம்
-
கராத்தே பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனி மறைவு
-
கொளப்பாக்கம் குப்பையால் விமானங்களுக்கு அச்சுறுத்தல் ஏர்போர்ட்டிற்குள் வலம் வரும் பறவைகளால் அபாயம்
-
கல்வியால் மட்டுமே நல்ல அரசை தர முடியும் வி.ஐ.டி., வேந்தர் விஸ்வநாதன் பேச்சு
-
தெலுங்கானா சுரங்க விபத்து; இரண்டாவது உடல் மீட்பு
-
கேட்பாரற்ற 48 டூ - வீலர்கள் ஏப்., 7ல் பொது ஏலம்
Advertisement
Advertisement