வார துவக்கத்தில் தங்கம் விலை சற்று குறைவு; இன்றைய நிலவரம் இதோ!

சென்னை: சென்னையில் வார துவக்க நாளான இன்று (மார்ச் 24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. மார்ச் 21ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 சரிந்து ஒரு சவரன் ரூ.66,160க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சனிக்கிழமை மார்ச் 22ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 சரிந்து ஒரு சவரன் ரூ.65,840க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் வார துவக்க நாளான இன்று (மார்ச் 24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,215க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வந்த நிலையில் இன்று சற்று விலை குறைந்து நகைப்பிரியர்களுக்கு ஆறுதல் கொடுத்துள்ளது.
