தனி அடையாள எண் பெற 28,974 விவசாயிகள் பதிவு

தேனி, : மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்குவதற்காக நடந்து வரும் சிறப்பு முகாம்களில் இதுவரை 28,974 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில விபரங்கள், ஆதார், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் உள்ளிட்ட விபரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் இதன் மூலம் விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்குவதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

மாவட்டத்தில் 50,189 விவசாயிகள் உள்ளனர்.

அவர்களில் (தாலுகா வாரியாக) தேனி 2839, ஆண்டிபட்டி 6904, பெரியகுளம் 5496, போடி 4577, உத்தமபாளையத்தில் 9158 பேர் என மொத்தம் 28,974 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

ஆண்டிபட்டி தாலுகாவில் மட்டும் 43 சதவீதம், மற்ற தாலுகாக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

மார்ச் 31க்குள் விவசாயிகள் சிறப்பு முகாம்களில் பதிவு செய்து கொள்ளுமாறு வேளாண் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Advertisement