கம்பம் உழவர் சந்தையில் ரூ.3 கோடிக்கு காய்கறி விற்பனை

கம்பம் : கம்பம் உழவர் சந்தையில் கடந்த பிப்ரவரியில் ரூ.3.8 கோடிக்கு காய்கறி, பழங்கள் விற்று சாதனை படைத்துள்ளது.



விவசாயிகள் தங்களின் விளை பொருள்களை பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்ய உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டது. மாவட்டத்தில் தேனி, சின்னமனூர், கம்பம் உழவர் சந்தைகள் இன்றும் நன்றாக செயல்பட்டு வருகின்றன. கம்பம் உழவர் சந்தையில் கடந்த பிப்., மட்டும் 10 லட்சத்து 12 ஆயிரத்து 670 கிலோ காய்கறிகள், பழங்கள், கீரைகள், தேங்காய் போன்றவைகள் விற்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.3 கோடியே 8 லட்சத்து 27 ஆயிரத்து 500 ஆகும். காய்கறிகள் வாங்கி சென்ற பொதுமக்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 390 பேர்களாகும். இது ஒரு சாதனை அளவாகும். உழவர் சந்தை அலுவலர்களின் சிறப்பான பணியால் காய்கறிகள் விற்பனை அதிகரித்து வருகிறது என்கின்றனர் பொதுமக்கள்.

Advertisement