மாயமான பிளஸ் 1 மாணவர் கிணற்றில் சடலமாக மீட்பு

ராமநத்தம் : பெரம்பலுார் மாவட்டம், ஒகலுார் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் மகன் ஆனந்த்ராஜ், 16; ராமநத்தம் அடுத்த ஆவட்டியில் உள்ள தனது பாட்டி சரஸ்வதி வீட்டில் தங்கி, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

நேற்று முன்தினம் பள்ளியில் தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்து, மாடுகளை பட்டியில் கட்டி விட்டு வெளியில் சென்றவர் திரும்பி வரவில்லை. உறவினர்கள் தேடியபோது, சரஸ்வதியின் விவசாய கிணற்றிற்கு அருகில் ஆனந்தராஜ் செருப்பு இருந்தது தெரிந்தது. தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு துறையினர், கிணற்றில் தேடியபோது ஆனந்தராஜ் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரிந்தது. ராமநத்தம் போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரித்தனர்.

ஆனந்தராஜ், பெற்றோரை விட்டு பிரிந்து இருந்ததால் மனவருத்தத்தில் இருந்துள்ளார். இதனால், நேற்று முன்தினம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

Advertisement