பாலினம் கண்டறியும் கருவியுடன் காரில் சுற்றிய 3 பேர் கைது

வேப்பூர் : வேப்பூரில், வீடுகளுக்கே சென்று, கருவின் பாலினம் கண்டறிந்து கூறும் கும்பலை போலீசார் கைது செய்தனர்.


கடலுார் மாவட்டம், வேப்பூர் பகுதியில் ஸ்கேன் இயந்திரம் மூலம் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து கூறப்படுவதாக சுகாதாரத் துறையினருக்கு புகார் சென்றது. அதன்பேரில், சுகாதாரத் துறை மாவட்ட அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று வேப்பூரில் சோதனையில் ஈடுபட்டனர். வேப்பூர் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடாமக நின்ற காரை சோதனை செய்தபோது, பாலினம் கண்டறியும் கருவியுடன் மூன்று பேர் இருந்தது தெரிந்தது.


அவர்களை பிடித்து, வேப்பூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், ஆவட்டி அடுத்த மா.புடையூரை சேர்ந்த தென்னரசு, 32; திட்டக்குடி பெரியார் நகர் தீனதயாளன் மனைவி அஜிரபீ, 32; சேலம் மாவட்டம், குமாரபாளையம் ஜெயவேல் மனைவி எல்லம்மாள், 32; என்பதும், பாலினம் கண்டறிய வேண்டியவர்கள் மொபைல் போனில் தொடர்பு கொண்டால், அவர்களின் வீட்டிற்கு சென்று இயந்திரம் மூலம் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து கூறுவது தெரிந்தது. போலீசார் வழக்குப் பதிந்து, தென்னரசு உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.

Advertisement