பைக் மோதிய விபத்து இருவர் பரிதாப பலி
பங்கார்பேட்டை: இருசக்கர வாகனம் மோதியதில் நடைபயிற்சி சென்ற இரு ஓய்வு பெற்ற விரிவுரையாளர்கள் உயிரிழந்தனர்.
பங்கார்பேட்டை ஜூனியர் கல்லுாரியில் விரிவுரையாளர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மோகன், 64. லட்சுமி நாராயணா, 62. இவர்கள் தினமும் காலை நேர நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
அதேபோல் நேற்று காலையும் ஜூனியர் கல்லுாரி அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபர், இவர்கள் மீது மோதியுள்ளார். விபத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவானார்.
விரிவுரையாளர்கள் இருவரும் கீழே விழுந்தனர். அவர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவிக்கு பின், தீவிர சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இருவரும் உயிர் இழந்தனர். தப்பிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும்
-
காற்று மாசு மூலம் பரவும் நோய்கள்; 2040க்குள் 50 சதவீதம் தடுக்க உலக நாடுகள் உறுதி
-
பல் வரிசை சீரமைப்பு சிகிச்சையில் விபரீதம்: நாக்கை துளைத்த டாக்டர் மீது இளம்பெண் போலீசில் புகார்
-
சென்னை மக்களுக்கு நல்ல செய்தி: பூண்டி வந்தது கிருஷ்ணா நதி நீர்
-
கசிந்த அமெரிக்க ராணுவ ரகசியம்; யார் மீது நடவடிக்கை? டிரம்ப் பதில்
-
போக்சோவில் வாலிபர் கைது
-
உயர்கல்விக்கு கவனமாக விண்ணப்பிக்க வேண்டும்