சென்னை மக்களுக்கு நல்ல செய்தி: பூண்டி வந்தது கிருஷ்ணா நதி நீர்

சென்னை: ஆந்திராவில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் பூண்டி நீர்த்தேகத்தை வந்தடைந்தது. கோடை வெயிலை சமாளிக்க தண்ணீர் ரெட் ஹில்ஸ் ஏரியில் சேமித்து வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையின் குடிநீருக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து, கிருஷ்ணா நதி நீர் வழங்கப்படுகிறது. கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நதி நீர், திருவள்ளூர் மாவட்டம் வழியாக சென்னையை வந்தடையும்.
சென்னை மக்களுக்கு கோடையில் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக தெலுங்கு கங்கை திட்டத்தில், தண்ணீர் வழங்கும்படி ஆந்திராவிடம் தமிழக நீர்வளத்துறை சமீபத்தில் கோரிக்கை விடுத்தது. அதன்படி கண்டலேறு அணையில் இருந்து, மார்ச் 24ம் தேதி கிருஷ்ணா ஆற்றில், முதற்கட்டமாக விநாடிக்கு 500 கன அடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் பூண்டி நீர்த்தேக்கம் வர தொடங்கியுள்ளது. தற்போது வினாடிக்கு 60 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வரும் நாட்களில் இது 500 கன அடியாக அதிகரிக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த தண்ணீர் ரெட் ஹில்ஸ் ஏரியில் சேமித்து வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதைய நிலையில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய்கண்டிகை - கண்ணன்கோட்டை ஆகிய நீர்த்தேக்கங்களில் 74% தண்ணீர் உள்ளது. கோடை வெயில் அதிகரித்து தண்ணீர் ஆவியாகும் பட்சத்தில், கிருஷ்ணா நதிநீர் உதவிகரமாக இருக்கும்.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் உள்ள கே.பி., கால்வாய் நுழைவு பகுதியில் தண்ணீர் வேகமாக வந்து கொண்டிருக்கிறது. இதில் 350 கனஅடி தண்ணீர் ரெட் ஹில்ஸ் நீர்த்தேக்கத்திற்கு திருப்பி விடப்படும். அங்கிருந்து சென்னை முழுவதும் விநியோகிக்கப்படும்.
நகரத்திற்கு இப்போது ஒரு நாளைக்கு 109 கோடி லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது, இது கடந்த மார்ச் மாதத்தை விட சற்று அதிகம். இவ்வாறு அவர் கூறினார். கிருஷ்ணா நதி நீர் வர தொடங்கியுள்ள நிலையில், கோடையில் பற்றாக்குறை இன்றி குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.





மேலும்
-
இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்; கேரள பா.ஜ. விளாசல்
-
கட்சி பாகுபாடின்றி நிதி ஒதுக்கீடு: இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
-
வேலைவாய்ப்பை தடுக்கும் சுயநல அரசியல்வாதிகள்: ஸ்டாலினை விமர்சித்த யோகி ஆதித்யநாத்
-
ஜூன் 15ல் குரூப் 1 முதல்நிலை தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
-
ஜார்க்கண்டில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்; லோகோ பைலட்டுகள் இருவர் உயிரிழப்பு
-
தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடியது சட்டசபை!