கசிந்த அமெரிக்க ராணுவ ரகசியம்; யார் மீது நடவடிக்கை? டிரம்ப் பதில்

வாஷிங்டன்: அமெரிக்க ராணுவ ரகசியம் கசிந்த விவகாரத்தில், 'தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸை பணிநீக்கம் செய்ய மாட்டேன்' என நிருபர்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதில் அளித்துள்ளார்.
ஏமனில் ஹவுதி கிளர்ச்சிப் படை தலைவர்கள் மற்றும் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இது தொடர்பாக அந்த நாட்டின் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்சேத், வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ, தேசிய உளவு அமைப்பின் இயக்குநர் துளசி கப்பார்ட், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் உள்ளிட்டோர் 'சிக்னல்' என்ற தகவல் தொடர்பு செயலி மூலம் தகவல் பரிமாற்றம் செய்தனர்.
இது அமெரிக்க பாதுகாப்பு துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குக் காரணம், அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குழுவில், அமெரிக்காவின் 'தி அட்லாண்டிக்' இதழின் தலைமை ஆசிரியர் ஜெப்ரி கோல்பர்க், எதிர்பாராதவகையில் சேர்க்கப்பட்டிருந்தது தான். இதனை அந்தக் குழுவில் இருந்த யாருமே கவனிக்காமல் இருந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமெரிக்க ராணுவ ரகசியம் கசிந்த விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்மைக் வால்ட்ஸை பணிநீக்கம் செய்வது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்ததா தகவல் பரவியது. இது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, டொனால்டு டிரம்ப் கூறியதாவது:
நான் அதை ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. என்னைத் தவிர வேறு யாரும் அந்த முடிவை எடுக்க முடியாது. நானும் அதை ஒருபோதும் செய்ய மாட்டேன். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் மற்றும் பென்டகன் தலைவர் பீட் ஹெக்செத் மீது தனக்கு நம்பிக்கை இருக்கிறது.
போலி செய்திகள் காரணமாக நான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸை பணிநீக்கம் செய்ய மாட்டேன். ஹவுதி படையினருக்கு எதிரான வான்வழித் தாக்குதலுக்கான தனது நிர்வாகத்தின் திட்டங்கள் தற்செயலாக கசிந்ததற்காக யார் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (2)
subramanian - Mylapore,இந்தியா
30 மார்,2025 - 22:17 Report Abuse

0
0
Reply
Petchi Muthu - TIRUNELVELI,இந்தியா
30 மார்,2025 - 13:08 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பெருமைக்குரிய அம்மா
-
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பாதிரியாருக்கு ஆயுள் தண்டனை
-
கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு
-
2026ல் மார்ச் 31க்குள் நக்சலிசம் ஒழிக்கப்படும்; அமித்ஷா திட்டவட்டம்
-
இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்; கேரள பா.ஜ. விளாசல்
-
கட்சி பாகுபாடின்றி நிதி ஒதுக்கீடு: இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
Advertisement
Advertisement