'ஹனி டிராப்' வழக்கு இன்று விசாரணை
பெங்களூரு : கர்நாடகாவில் நடந்த 'ஹனி டிராப்' விவகாரம், உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இன்று இம்மனு மீது விசாரணை நடக்க உள்ளது.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில், இம்மாதம் 20ம் தேதி சட்டசபையில் பேசிய அமைச்சர் ராஜண்ணா, 'என்னையும் ஹனி டிராப்பில் சிக்கவைக்க சூழ்ச்சி நடந்தது' என பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக விசாரிக்கக் கோரி, சட்டசபையில் காகிதத்தை கிழித்து, சபாநாயகர் காதர் முன் வீசிய சம்பவத்தில், 18 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் ஆறு மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவில், 'கர்நாடகாவில் மக்கள் பிரதிநிதிகள், நீதிபதிகள் உட்பட 48 பேருக்கு 'ஹனி டிராப்' நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்' என குறிப்பிட்டிருந்தனர்.
இம்மனு நேற்று தலைமை நீதிபதி சஞ்சிவ் கன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இன்று விசாரணைக்கு பட்டியலிடும்படி உத்தரவிட்டார்.
மேலும்
-
காற்று மாசு மூலம் பரவும் நோய்கள்; 2040க்குள் 50 சதவீதம் தடுக்க உலக நாடுகள் உறுதி
-
பல் வரிசை சீரமைப்பு சிகிச்சையில் விபரீதம்: நாக்கை துளைத்த டாக்டர் மீது இளம்பெண் போலீசில் புகார்
-
சென்னை மக்களுக்கு நல்ல செய்தி: பூண்டி வந்தது கிருஷ்ணா நதி நீர்
-
கசிந்த அமெரிக்க ராணுவ ரகசியம்; யார் மீது நடவடிக்கை? டிரம்ப் பதில்
-
போக்சோவில் வாலிபர் கைது
-
உயர்கல்விக்கு கவனமாக விண்ணப்பிக்க வேண்டும்