அரசியல் அமைப்பை மாற்றுவோம் என்பதா? சிவகுமாருக்கு பா.ஜ., - ம.ஜ.த., கண்டனம்!

பெங்களூரு : 'மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசியல் அமைப்பு சட்டம் மாற்றப்படும்' என, துணை முதல்வர் சிவகுமார் கூறியதற்கு, பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
குழப்பம்
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, தன் 'எக்ஸ்' பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது:
கடந்த தேர்தல்களின் போது, அரசியல் அமைப்பை மாற்றும்வோம் என்று பா.ஜ.,வுக்கும், நரேந்திர மோடிக்கும் எதிராக திட்டமிட்டு பிரசாரத்தை மேற்கொண்டனர். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அதிகாரத்தை கைப்பற்ற முயன்றனர்.
காங்கிரசின் உண்மையான முகத்தை இன்று மாநில மக்களும், நாட்டு மக்களும் புரிந்து கொண்டனர். முஸ்லிம்களின் நலனுக்காக மட்டுமே காங்கிரஸ் உள்ளது என்ற யதார்த்தத்தை எஸ்.சி., - எஸ்.டி., சமூக மக்கள் உணர வேண்டும். ஏற்கனவே, எஸ்.சி., - எஸ்.டி., நிதியை, வாக்குறுதித் திட்டங்களுக்காக பயன்படுத்தி உள்ளனர்.
பிற்படுத்தப்பட்டோர் வாரியங்களுக்கு, குறைந்தபட்ச அளவிலான மானியங்களை கூட விடுவிக்காமல் இருப்பதன் மூலமும் ஹிந்துக்களுக்கு தான் விரோதமானது என்பதை காங்கிரஸ் நிரூபித்துள்ளது.
இப்போது முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அரசியல் அமைப்பின் விருப்பங்களை ஒதுக்கித் தள்ளி, அரசியல் அமைப்பையே கவிழ்க்க தயாராக இருப்பதாக காங்கிரசார் செயல்படுகின்றனர்.
எதிர்ப்பவர்கள்
அரசியல் அமைப்பை எதிர்ப்பவர்கள் யார், மாற்றுவது யார் என்பது இப்போது மக்களுக்கு புரிந்திருக்கும்.
நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்தை பாதுகாக்கவும், அரசியலமைப்பின் விருப்பங்களை எந்தவித விலகலும் இல்லாமல், மக்களிடம் எடுத்துச் செல்வதும் ஆகும். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒவ்வொரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.
முஸ்லிம்களின் நலனில் மட்டுமே கவனம் செலுத்தும் காங்கிரசுக்கு பாடம் கற்பிக்க, மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டியது தவிர்க்க முடியாது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தன் 'எக்ஸ்' பக்கத்தில் மத்திய அமைச்சர் குமாரசாமி வெளியிட்டுள்ள பதிவு:
இடஒதுக்கீடு என்பது மதத்தின் அடிப்படையில் இருக்கக் கூடாது. சமூக நீதியின் அடிதப்படையில் இருக்க வேண்டும்.
முஸ்லிம்களுக்கு நான்கு சாதவீதம் இடஒதுக்கீடு தொடர்பாக, பா.ஜ., - ம.ஜ.த., இடையே எந்த முரண்பாடும் இல்லை. இரு கட்சிகள் இடையே மோதல் என்ற செய்தியில் உண்மையில்லை.
சட்டசபை கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பு, பெங்களூரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. இதில், அனைத்து பிரச்னைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் நானும் பங்கேற்றேன்.
தேர்தலுக்காக...
காங்கிரஸ் அரசும், தேர்தல் சுயநலத்துக்காகவும், ஓட்டு வங்கிக்காகவும் மட்டுமே 'சமூக நீதி'க்கான கருத்தை அழிக்கிறது. மக்களை திருப்திபடுத்தும் ஆயுதமாக இடஒதுக்கீட்டை பயன்படுத்தி, அவர்களை தவறாக வழிநடத்துகிறது. இதற்காகவே, நாடு முழுதும் இடஒதுக்கீடு அராஜகத்தை உருவாக்கி வருகிறது.
மக்கள் நல போராட்டங்களுக்காக, பா.ஜ., - ம.ஜ.த., ஒன்றாக போராடி வந்துள்ளன. இந்த போராட்டம் தொடரும். இதில் சமரசம் என்ற கேள்விக்கே இடமில்லை.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
-
காற்று மாசு மூலம் பரவும் நோய்கள்; 2040க்குள் 50 சதவீதம் தடுக்க உலக நாடுகள் உறுதி
-
பல் வரிசை சீரமைப்பு சிகிச்சையில் விபரீதம்: நாக்கை துளைத்த டாக்டர் மீது இளம்பெண் போலீசில் புகார்
-
சென்னை மக்களுக்கு நல்ல செய்தி: பூண்டி வந்தது கிருஷ்ணா நதி நீர்
-
கசிந்த அமெரிக்க ராணுவ ரகசியம்; யார் மீது நடவடிக்கை? டிரம்ப் பதில்
-
போக்சோவில் வாலிபர் கைது
-
உயர்கல்விக்கு கவனமாக விண்ணப்பிக்க வேண்டும்