அங்காளன் எம்.எல்.ஏ.,வை கண்டித்து போஸ்டர்: கட்சி பாகுபாடின்றி எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு நடவடிக்கை எடுக்க சபாநாயகர் செல்வம் உத்தரவு

புதுச்சேரி: சட்டசபை பூஜ்ய நேரத்தில் நடந்த விவாதம்

அங்காளன்(சுயேச்சை): சட்டசபையில் கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பேசினேன். அதற்காக எனக்கு எதிராக திருபுவனை தொகுதியில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், கும்ப மரியாதையை கேட்டு பெறும் செல்லிப்பட்டு அங்காளனே, திருபுவனை தொகுதி மக்களின் மீது அக்கறை காட்டாமல், துாங்கும் செல்லிப்பட்டு அங்காளனே என எனது போட்டோவுடன் அச்சடித்து ஒட்டியுள்ளனர்.

போஸ்டர், அச்சிட்டவர் உள்ளிட் எந்த விபரமும் இல்லை. என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். நான் தாழ்த்தப்பட்ட எம்.எல்.ஏவாக இருப்பதால் கும்பமரியாதை வாங்க கூடாதா.

இதுதொடர்பாக திருபுவனை போலீசில் நான் புகார் அளித்தேன். ஆனால், அவர்கள் தமிழக முதல்வருக்கு எதிராகவும்தான் போஸ்டர் ஒட்டுகின்றனர் என அலட்சியமாக பதில் கூறுகின்றனர்.

கல்யாணசுந்தரம் (பா.ஜ.,): தாழ்த்தப்பட்ட எம்.எல்.ஏக்கள் என்று பாராமல் அவருக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் அல்லது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

என்.ஆர்.காங்., பா.ஜ., காங்., சுயேச்சை எம்.எல்.ஏக்கள் , . எம்.எல்.ஏக்களின் உரிமையை நீங்கள் தான் பெற்று தர வேண்டும். போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒட்டுமொத்தமாக கோரிக்கை வைத்தனர்.

சபாநாயகர் செல்வம்: அங்காளன் எம்.எல்.ஏ.,பற்றி அவதுாறாக போஸ்டர் ஒட்டியவர்கள் யார் என விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடுகிறேன்.

Advertisement