ஆப்கன் தலிபான்கள் கஸ்டடியில் இருந்த அமெரிக்கப் பெண் விடுதலை

காபூல்: ஆப்கனில் தலிபான்கள் கஸ்டடியில் இருந்த அமெரிக்கப் பெண் பாயே ஹால் விடுதலை செய்யப்பட்டார். அவர் உடல் நலத்துடன் உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆப்கனில் அமெரிக்கப் பெண் பாயே ஹால் என்பவரை தலிபான்கள் இரண்டு மாதங்களுக்கு முன் சிறைபிடித்தனர். எந்தவிதமான அனுமதியும் இன்றி டிரோன் கேமரா உதவியுடன் அவர் படம் பிடித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை விடுவிப்பதற்கு அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டது.
தற்போது அமெரிக்க அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே சமாதான தூதுவராக செயல்படும் கத்தார் நாட்டின் முயற்சியால் பாயே ஹால் விடுவிக்கப்பட்டார். ஹால் காபூலில் உள்ள கத்தார் தூதரகத்தில் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் அமெரிக்கா திரும்புவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன.
ஹாலின் படத்தைப் பகிர்ந்துகொண்டு, ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் ஜல்மே கலீல்சாத் கூறியிருப்பதாவது: தாலிபான்களால் விடுவிக்கப்பட்ட அமெரிக்க பெண் ஹால், இப்போது காபூலில் உள்ள எங்கள் நண்பர்களான கத்தார் மக்களின் பராமரிப்பில் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார். இவ்வாறு அவர் கூறினார்.
ஹாலின் வீடியோவை டிரம்ப் சமூக வலைதளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும்
-
நீலகிரி மாவட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை: கலெக்டர் அறிவிப்பு
-
அன்போடு... அன்போடு... அன்போடு...! பா.ஜ., எம்.எல்.ஏ.,வுக்கு முதல்வர் பதில்
-
காசாவில் 10 நாட்களில் 322 குழந்தைகள் பலி
-
மலேசியாவில் காஸ் குழாய் வெடித்தது; தீப்பிழம்புகள் எழுந்ததால் பரபரப்பு!
-
டாஸ்மாக் ரெய்டுக்கு எதிரான வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யணும்: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனு
-
குளம் தூர் வாரும் பணி துவக்க விழா