பள்ளி ஆண்டு விழா

பாகூர்: கடுவனூர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

விழாவில், ஆசிரியை ரஞ்சினி வரவேற்றார். பொறுப்பாசிரியர் செந்தமிழ் செல்வன் தலைமையுரையாற்றினார். நெட்டப்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பேசினார்.

சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று, விழாவையொட்டி நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

ஆசிரியை கலையரசி தொகுப்புரையாற்றினார். ஆசிரியர் இரிசம்மாள் நன்றி கூறினார். விழாவில், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement