உலக தண்ணீர் தினம்

அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் மரம் நடுவோர் சங்கம் சார்பில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

சங்க தலைவர் பெருமாள், செயலாளர் முருகன், விக்னேஷ் முன்னிலை வகித்தனர்.

செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார், பிரசாரத்தை துவக்கி தண்ணீரின் அவசியமும், சிக்கனமும் குறித்தும் மரம் நடுதலை ஊக்குவித்தும் பேசினார்.

ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், ஷாகின் அர்ஷத் , ஊராட்சி தலைவர் செல்வம், மாவட்ட கவுன்சிலர் செல்வி ராமசரவணன், தமிழ்ச்சங்கத் தலைவர் புருஷோத்தமன், ஏழுமலை, மகாராஜன், மணியரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பிரசாரத்தின் போது, பிளாஸ்டிக் எதிர்ப்பு குறித்த கைெயழுத்து இயக்கம் நடந்தது.

Advertisement