பைக்கில் புகுந்த பாம்பு மீட்பு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் பைக்கில் புகுந்து அச்சுறுத்திய பாம்பை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த செம்மணங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம், 45; விவசாயி. இவர், ஸ்பிளண்டர் பைக்கை, உளுந்துார்பேட்டை நாராயணன் தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள கடையில் நிறுத்தி விட்டுச் சென்றார்.

நேற்று மாலை 4:00 மணியளவில் வந்து பார்த்தபோது. பைக்கின் முன் பகுதியில் இரண்டடி நீளமுள்ள பாம்பு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

தகவல் அறிந்த உளுந்துார் பேட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பைக்கில் அச்சுறுத்திய விஷத்தன்மை யற்ற பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

Advertisement