மதுபாட்டில், குட்கா விற்ற 3 பேர் கைது

தியாகதுருகம்: தியாகதுருகம் பகுதியில் மதுபாட்டில் மற்றும் குட்கா பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தியாகதுருகம் போலீசார், பிரிதிவிமங்கலம் காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வெவ்வேறு இடங்களில் மதுபாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த செந்தில், 37; பரிகம் கிராமத்தைச் சேர்ந்த மாயவன், 30; ஆகியோரை போலீசார் கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த, தியாகதுருகம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த மகாதேவன், 59; என்பவரை கைது செய்து, குட்கா பாக்கெட்டு களை பறிமுதல் செய்தனர்.

Advertisement