சிட்டி கிரைம் செய்திகள்

குடிமகன் மீது தாக்குதல்; இருவர் மீது வழக்கு



கோவை, நல்லாம்பாளையம் முத்து தெருவை சேர்ந்தவர் லாசர், 42; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் துடியலூரில் உள்ள பாருக்கு, மது குடிக்க சென்றார். அப்போது 'சைட் டிஷ்' -ஆக கோழிக்கறி வாங்கினார். சுவை மாறியதால் பழைய கோழிக்கறியை கொடுத்ததாக, ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் பேசி லாசரை தாக்கினர். காயமடைந்த லாசரை அங்கிருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, துடியலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பார் ஊழியர்கள் விஜி ஆனந்த், 29 மணிவாசகம், 32 ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

வீட்டில் விபச்சாரம்; பெண்கள் மீட்பு



கோவை சரவணம்பட்டி - - துடியலூர் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில், இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற சரவணம்பட்டி போலீசார், சோதனை நடத்தினர். அப்போது அங்கு இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிந்தது. போலீசார் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஹரியானா, டில்லியை சேர்ந்த 2 இளம்பெண்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். விபச்சார புரோக்கர் சென்னை தியாகராய நகரை சேர்ந்த சபியுல்லா, 53என்பவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement