விளாங்குறிச்சியில் குப்பை தரம் பிரிப்பு; நிறுத்த கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை

கோவை; பீளமேடு விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள, மயானத்தில் செயல்படும் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கான விஸ்தரிப்பு பணிகளை நிறுத்துமாறு, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பீளமேடு, விளாங்குறிச்சி சாலையில், ஏழு ஏக்கரில் அமைந்துள்ளஇந்து மயானத்தில் மூன்றுஏக்கருக்கு, குப்பை தரம் பிரிக்கும் மையம் செயல்படுகிறது.மீதமுள்ள நான்கு ஏக்கரில் இரண்டில்,மின் மயானம் செயல்படுகிறது.
மயானமாக உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தில்,குப்பை தரம் பிரிக்கும் மையத்தை விரிவாக்கம் செய்ய கட்டுமான பணிநடக்கிறது. இதனால் பீளமேடு சுற்றுவட்டார மக்கள்,மயானத்தை பயன்படுத்த முடியாதசூழல் ஏற்பட்டுள்ளது.
இங்கு கொட்டப்படும் குப்பைகளாலும், மின் மயானத்திலிருந்து வரும் துர்நாற்றத்தாலும் மக்கள் கடுமையாகபாதிக்கப்படுகின்றனர். ஆகவே, இங்கு குப்பை தரம் பிரிக்கும் பணிகளை நிறுத்த, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
* காரமடையிலுள்ள தனியார்நிறுவனத்தில், 800 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.கடந்த ஆண்டு இந்நிறுவனம் மூடப்பட்டது. ஆலையை மீண்டும் திறக்க வேண்டும், சம்பளம், இழப்பீடு, நிவாரணம் வழங்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.
மேலும்
-
போதை பயன்பாடு தடுக்க ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு
-
நொய்யலாற்று விளைநிலங்களில் பாதிப்பு இழப்பீட்டுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
-
தாயமங்கலம் கோயில் விழா இன்று இரவு கொடியேற்றம்
-
மிகவும் பயனுள்ளதாக இருந்தது மாணவ, மாணவியர் மகிழ்ச்சி
-
பவானி ஆற்றை மீட்டெடுக்க பா.ஜ., போராட்டம் நடத்த முடிவு
-
கடைமடைக்கு தண்ணீர் வரலே... மும்முனை மின்சாரத்தில் வெட்டு... தெருநாய் தொல்லை ------------------------------------------------------------------------- குறைகேட்பு கூட்டத்தில் குறைகளுக்கு பஞ்சமில்லை விவசாயி பிரச்னைக்கு தீர்வு கிடைத்தால் தொல்லையில்லை விவசாயிகள் வேண்டுகோள்