மாணவரை தாக்கிய ஆறு பேர் கைது

போத்தனூர்; கோவை தனியார் கல்லூரியில், முதுகலை முதலாமாண்டு படித்து வந்த சென்னை, எண்ணூரை சேர்ந்த ஹாதி, 21. கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார்.

கடந்த வாரம் இவரை இன்ஜி., கல்லூரியில் முதலாமாண்டு பயிலும், 13 மாணவர்கள் பணத்தை திருடி விட்டதாக சந்தேகப்பட்டு ஹாதியை தாக்கினர்.

இதுகுறித்த வீடியோ நேற்று முன்தினம் பரவி வைரல் ஆனது. முன்னதாக கல்லூரி நிர்வாகம், 13 பேரையும் சஸ்பெண்ட் செய்தது. போலீசிலும் புகார் செய்தனர்.

விசாரித்த க.க.சாவடி போலீசார் திருசெல்வம், சாம்ஜான் பவுல், ஈஸ்வர் மற்றும் 17 வயதுடைய மூவர் என, ஆறு பேரை கைது செய்தனர்.

Advertisement