கூட்டுறவு சங்கத்தில் விவசாய கடன் தள்ளுபடி ரசீது வழங்க வலியுறுத்தல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஒன்றியம் வெண்ணத்துார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 2016-17ம் ஆண்டிற்கான விவசாய கடன் தள்ளுபடி ரசீது வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

காவிரி-வைகை- கிருதுமால்- குண்டாறு இணைப்பு கால்வாய் நீர்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் மலைச்சாமி தலைமையிலான விவசாயிகள் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர்.

அதில், வெண்ணத்துார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நிரந்தரமாக பணியாளர்களை நியமிக்க வேண்டும். 2016-17 ம் ஆண்டில் விவசாய கடன் தள்ளுபடி செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாமல் 40க்கு மேற்பட்ட விவசாயிகள் புதிய கடன், உரம் வாங்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாய கடன் தள்ளுபடி ரசீது வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Advertisement