ரோட்டில் குப்பை வீசியதால் 20 ஆயிரம் ரூபாய் அபராதம்

கோவை; கோவை மாநகராட்சி, 42வது வார்டு, தவசி நகர் பகுதியில் சந்தைப்பேட்டை செயல்படுகிறது. இங்கு உருவாகும் குப்பையை ரோட்டில் வீசுவதாகவும், தீ வைத்து எரிப்பதாகவும் புகார் எழுந்தது.

மேற்கு மண்டல சுகாதார அலுவலர் வீரன், சந்தைப்பேட்டையில் நேற்று ஆய்வு செய்தார்.

குப்பையை முறையாக அகற்றாமல் இருந்ததற்காக, ஏலதாரருக்கு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

குப்பையை தரம் பிரிப்பது, எரிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சுகாதார ஆய்வாளர் ரமேஷ் உடனிருந்தார்.

Advertisement