நள்ளிரவில் பைக் சாகசம் 14 பேருக்கு அபராதம்

சென்னை : சென்னை, அண்ணா சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 10க்கும் மேற்பட்ட வாலிபர்கள், அதிவேகமாக வாகனங்களை ஓட்டி, பைக் சாகசத்தில் ஈடுபட்டனர்.
இது, அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நவீன கேமராவில் பதிவாகி, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்றது.
அங்கிருந்த ஊழியர்கள், இரவு பணியில் இருந்த, உதவி கமிஷனர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசாரிடம், தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, தேனாம்பேட்டை, கோட்டூர்புரம், நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 14 பேரை பிடித்து, தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
மேலும், பிடிபட்டோரின் பெற்றோரை வரவழைத்து, அவர்கள் முன்னிலையில், 'இது போன்று பைக் சாகசத்தில் ஈடுபடமாட்டோம்' என, உறுதி மொழி எழுதி வாங்கிய பின் அனுப்பினர்.
நடப்பாண்டில், அதிவேகமாக வாகனம் ஓட்டியது தொடர்பாக, 1,450 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.
மேலும்
-
திட்டமிட்ட உள்நோக்கத்துடன் அவதுாறு: அமெரிக்க அமைப்பின் அறிக்கைக்கு இந்தியா கண்டனம்!
-
சிறுவர்களால் நிகழும் சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம்; அதிர்ச்சி தகவல்
-
தந்தை, மகளை சுட்டுக் கொன்ற வாலிபர் தற்கொலை!
-
ரூ.200 கோடி வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க உதவிய வாட்ஸ் அப் செயலி: நிர்மலா சீதாராமன்
-
வீடு வீடாக சென்று போதைப்பொருள் பயன்படுத்துவோர் கணக்கெடுப்பு: பஞ்சாப் அரசின் புது திட்டம்
-
அமித்ஷா மீது உரிமை மீறல் தீர்மானம்: காங்கிரஸ் நோட்டீஸ்