நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு ஒருவருக்கு 10 ஆண்டு சிறை

விழுப்புரம்; புதுச்சேரி அடுத்த கரசூரைச் சேர்ந்தவர் ஏழுமலை, 45; இரும்பு கடை வைத்துள்ளார். இவருக்கும், விக்கிரவாண்டி அடுத்த வீடூரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், கடந்த 2006ம் ஆண்டில் கள்ளத் தொடர்பு இருந்தது. பின்னர் அப்பெண் திடீரென ஏழுமலையுடன் தொடர்பை துண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த ஏழுமலை, தான் செலவு செய்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டு, அந்தப்பெண்ணின் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசினார். இதில், அந்தப்பெண் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.

விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசிம்மவர்மன், குற்றவாளியான ஏழுமலைக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

Advertisement