சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் திருத்தணியில் ஆர்ப்பாட்டம்

திருத்தணி : திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனை முன், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில், மோட்டார் தொழிலை கார்ப்பரேட் மயமாக்கும் மோட்டார் வாகன சட்ட பிரிவுகளை திரும்ப பெற வேண்டும். பொது துறைகளை தனியார் மயமாக்க கூடாது. தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 15வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய - மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Advertisement