தார் தொழிற்சாலை புகையால் லிங்காபுரத்தில் பாதிப்பு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றி யம், லிங்காபுரத்தில் இருந்து, கொசப்பட்டு செல்லும் சாலை உள்ளது. லிங்காபுரம்அருகாமையிலான சாலையையொட்டி உள்ள நிலத்தில், சில ஆண்டுகளுக்கு முன், தனியார் நிறுவனம் தார் தயாரிக்கும் தொழிற்சாலை துவங்கியது.
இத்தொழிற்சாலை அருகே சாலை மற்றும் சாகுபடி செய்யும் விவசாய நிலங்கள் உள்ளன. தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகையால், துர்நாற்றம் மற்றும் விவசாயம் பாதிப்பு, சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பிரச்னைகள்ஏற்படுகின்றன. இந்த புகை காற்றை சுவாசிப்பதால் அச்சாலை வழியாக பயணிப்போர் சுவாசக்கோளாறு உள்ளிட்டபிரச்னைகளால் அவதிபடுகின்றனர். கால்நடைகளும் நோய் வாய்ப்படுவதாக அப்பகுதியினர் புலம்புகின்றனர்.
எனவே, இத்தொழிற்சாலையில் இருந்து, வெளியேறும் புகை,மக்களை பாதிக்காதவாறு அதிக உயரம் கொண்ட புகை கூண்டு அமைத்து கரும்புகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
மேலும்
-
திட்டமிட்ட உள்நோக்கத்துடன் அவதுாறு: அமெரிக்க அமைப்பின் அறிக்கைக்கு இந்தியா கண்டனம்!
-
சிறுவர்களால் நிகழும் சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம்; அதிர்ச்சி தகவல்
-
தந்தை, மகளை சுட்டுக் கொன்ற வாலிபர் தற்கொலை!
-
ரூ.200 கோடி வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க உதவிய வாட்ஸ் அப் செயலி: நிர்மலா சீதாராமன்
-
வீடு வீடாக சென்று போதைப்பொருள் பயன்படுத்துவோர் கணக்கெடுப்பு: பஞ்சாப் அரசின் புது திட்டம்
-
அமித்ஷா மீது உரிமை மீறல் தீர்மானம்: காங்கிரஸ் நோட்டீஸ்