கழுகு பார்வையில் கண்காணிப்பு ; தெலுங்கானா போலீசில் அறிமுகம்

2

ஐதராபாத்: இந்தியாவிலேயே முதன்முறையாக கழுகுகளை போலீஸ் படையில் சேர்த்து பணியாற்றும் புதிய திட்டத்தை தெலுங்கானா போலீசார் அறிமுகம் செய்ய உள்ளனர்.


உலகில் போலீஸ் படையில் துப்பறியும் நாய்களே பெரும்பாலும் இடம் பெற்றுள்ளன. தற்போது நவீனம் பெருக, பெருக போலீசார் பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதன் மற்றொரு புதிய முயற்சியாக கழுகுகளுக்கு பயிற்சி அளிக்க தெலுங்கானா போலீசார் திட்டமிட்டுள்ளனனர். இதற்கான பயிற்சியும் துவக்கப்பட்டுள்ளது

இதன் உடலில் முக்கிய நவீன தொழில் நுட்பம் கொண்ட கருவிகள் பொருத்தப்பட்டு வானில் வட்டமிட செய்யும். குறிப்பாக அனுமதி இன்றி பறக்கும் ட்ரோன்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உதவியாக கழுகுகள் உதவும். இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

Advertisement