'யார் புதுமையாக சிந்திக்கின்றனரோ அவர்களுக்கே வெற்றி கிடைக்கும்'

'நீங்களும் விஞ்ஞானி ஆகலாம்' எனும் தலைப்பில், இந்திய பாதுகாப்பு துறையின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின்(டி.ஆர்.டி.ஓ.,) ராணுவ விஞ்ஞானி டாக்டர் டில்லிபாபு பேசியதாவது:படித்தவர்கள் எல்லாம் வெற்றி பெற்று விடவில்லை. யார் தங்கள் துறையில் புதுமையாக சிந்திக்கின்றனரோ அவர்களுக்கே வெற்றி.

அனைவரும் புதுமையை மேற்கொண்டால் மட்டுமே வளர்ச்சி என்பது நமக்கு சாத்தியமாகும். டி.ஆர்.டி.ஓ.,வில் மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஸ்டார்ட் அப் களை துவங்குவோருக்கு டி.ஆர்.டி.ஓ.,வின் 'டேர் டு ட்ரீம்' எனும் போட்டி வாயிலாக நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தியாவில் 1.70 லட்சம் ஸ்டார்ட் அப்கள் உள்ளன. அதில், 7,000 ஸ்டார்ட் அப்கள் மாணவியரால் துவங்கப்பட்டவை.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement