உலகை சுற்றிக்கொண்டே கைநிறைய சம்பாதிக்கலாம்

மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி பேராசிரியர் சுரேஷ்குமார் பேசியதாவது:
வித்தியாசமான படிப்புகளை தேர்வு செய்ய விரும்புபவர்கள், மெரைன் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புகளை தேர்வு செய்யலாம்.
பிளஸ்2 பாடப்பிரிவில், 50 சதவீதம் மதிப்பெண் பெற்று இருந்தால் போதுமானது. 90 சதவீதம் செய்முறையாகவும், 10 சதவீதம் மட்டுமே தியரியாகவும் கற்றல், கற்பித்தல் முறை அமைந்து இருக்கும். இப்படிப்பில் மட்டுமே, உலகை சுற்றிக்கொண்டே கைநிறைய சம்பாதிக்கலாம். படித்து முடித்தவுடன், கப்பலில் 85 ஆயிரம் ரூபாயில் வேலை எளிதாக பெறலாம். சற்று அனுபவம் பெற்ற பின்னர், 1.50 லட்சம் சம்பளம் பெறலாம்.
இப்படிப்பு முடிப்பவர்கள், கப்பல் மட்டுமின்றி, ஸ்டார் ஹோட்டல், மருத்துவமனைகள், ரயில்வே கேட்டரிங், சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகளிலும் பல வாய்ப்புகள் உள்ளன. சரியான உள்கட்டமைப்பு, நாக்., தரச்சான்று, என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை, தொழில்துறைக்கு ஏற்ற பாடத்திட்டம் அனைத்தும் உள்ளதா என்பதை நேரடியாக சென்று பார்த்து கல்லுாரியை முடிவு செய்யுங்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மேலும்
-
பெண்ணின் தோள் மீது கைபோட்ட நிதிஷ் புகைப்படத்தால் சர்ச்சை
-
ஓட்டல்களில் பிளாஸ்டிக் தாளில் உணவு பார்சல்கள் அலட்சியம்; உணவு பாதுகாப்புத்துறை ரெய்டு அவசியம்
-
பத்திரப்பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைப்பு: நாளை முதல் அமல்
-
ஜவுளிக்கழிவு மறுசுழற்சி செய்யும் முறை: திருப்பூருக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
ஆட்டிசம் பாதித்த சிறுவனுக்கு அடி: ஆசிரியர் கைது; பள்ளிக்கு சீல்
-
'நான் பழைய மூர்த்தி இல்லை' செல்லுார் ராஜூவுக்கு அமைச்சர் மூர்த்தி பதில்