'சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும்'

டிரோன் தொழில்நுட்பம் குறித்து அண்ணா பல்கலை ஏரோ ஸ்பேஸ் ஆராய்ச்சி துறை இயக்குனர் செந்தில்குமார் பேசியதாவது:

ஏரோ ஸ்பேஸில் ஆர்வம் இருந்தால் டிரோன் தொழில்நுட்ப கல்வியை படிக்கலாம். 'சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும்' வாய்ப்புகள் அனைத்து இடங்களிலும் கொட்டிக்கிடக்கிறது. இன்று டிரோன் துறையில் மாதம் குறிப்பிட்ட அளவு வருவாயை பெறலாம். டிரோன் வாயிலாக பாதுகாப்பை வழங்க முடியும். வேளாண் துறையில் டிரோன்கள் பயன்பாடு அதிகளவில் உள்ளது. மாநில அரசு ஒவ்வொரு கிராமத்திலும் டிரோன் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளது. டிரோன் தொழில்நுட்பம் பயின்றால் எளிதில் தொழில்முனைவோராக மாறலாம். இந்தியாவில், 6.5 லட்சம் டிரோன் பயிற்சி பெற்றவர்கள் தேவை உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement