செல்வப்பெருந்தகை செய்த பகீர் ஊழல்: சி.பி.ஐ.,யில் சவுக்கு சங்கர் புகார்

சென்னை: தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக்கும் தமிழக அரசின் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, சி.பி.ஐ.,யிடம் யுடியூபர் சவுக்கு சங்கர் புகார் அளித்து உள்ளார்.
சென்னை, கீழ்ப்பாக்கம், தாமோதரமூர்த்தி தெருவில் வாடகைக்கு குடியிருக்கும், 'யூடியூபர்' சவுக்கு சங்கர் வீட்டை, கடந்த மார்ச் 24ல் ஒரு கும்பல் சூறையாடியது. டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் மலத்தைக் கரைத்து தெளித்து அசிங்கப்படுத்தினர்.
அப்போது வீட்டில், சங்கரின், 68 வயதான தாய் கமலா இருந்தார். அவரையும் அச்சுறுத்தினர். இச்சம்பவம் குறித்து, கீழ்ப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில், அவர் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி சவுக்கு சங்கர் கூறியதாவது: தமிழக அரசு, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் வாயிலாக, துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
துாய்மை பணியாளர்களுக்கு, 50 சதவீத மானியத்துடன், நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், 213 துாய்மை பணியாளர்களுக்கு கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டம் உண்மையான பயனாளிகளுக்கு சென்று சேரவில்லை.
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையும் மற்றொரு நபரும், ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு, துாய்மை பணியாளர்களை கணக்கு காட்டி, கழிவுநீர் அகற்றும் ஊர்திகளை பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மாதம், 20 - 50 ஆயிரம் ரூபாய் வரை, துாய்மை பணியாளர்களுக்கு கொடுத்துவிட்டு, கோடிக்கணக்கில் சட்ட விரோதமாக சம்பாதிக்கின்றனர் என்பதை ஆதாரத்துடன், 'வீடியோ' வெளியிட்டு இருந்தேன் எனக்கூறியிருந்தார்.
ஆனால், இதை மறுத்த செல்வப்பெருந்தகை, மாநகராட்சி ஒப்பந்தத்தை நான் எடுத்திருப்பதாக கூறுகின்றனர். நான் எப்படி எடுக்க முடியும். இந்த குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் எனக்கூறியிருந்தார். தாக்குதல் சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்த போலீசார், பிறகு அவர்களை ஜாமினில் விடுவித்தனர்.
இந்நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ.,யிடம் சவுக்கு சங்கர் புகார் மனு அளித்து உள்ளார். இந்த மனுவில் செல்வப்பெருந்தகை, தலித் இந்தியன் சாம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் தொழில்துறை தலைவர் ரவிகுமார் நாரா உள்ளிட்டோர் மீது புகார் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் உள்ள சி.பி.ஐ.,யின் தென்மண்டல கூடுதல் இயக்குநரிடம் இந்த மனு அளிக்கப்பட்டு உள்ளது.











மேலும்
-
தமிழ் கலாசாரத்தின் ஆன்மாவாக விளங்கும் கம்பராமாயணம்: கவர்னர் நெகிழ்ச்சி
-
டோங்கா தீவு அருகே நிலநடுக்கம்: ரிக்டரில் 7.1 ஆக பதிவு
-
பீகாரில் லாலுவின் காட்டாட்சி வேண்டுமா, முன்னேற்றம் தரும் அரசு வேண்டுமா; அமித் ஷா பேச்சு
-
சென்னை அணி சொதப்பல்; ராஜஸ்தான் அணி அதிரடியான தொடக்கம்
-
இந்திய கலாசாரத்தின் ஆலமரமாக திகழும் ஆர்.எஸ்.எஸ்.,: பிரதமர் மோடி புகழாரம்!
-
ஷேன் வார்னே மரணத்தில் மறைக்கப்பட்ட உண்மை: வெளியான தகவலால் பரபரப்பு