தமிழக மீனவர் பிரச்னைக்கு மூலகாரணம்: பார்லியில் அமைச்சர் ஜெய்சங்கர் பதில்

புதுடில்லி: '' தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு கடந்த 1974 மற்றும் 1976 ல் எடுக்கப்பட்ட முடிவுகளே மூலகாரணம்'', என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
மீனவர் பிரச்னை தொடர்பாக ராஜ்யசபாவில் அவர் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: நேற்று வரை இலங்கை சிறைகளில் 86 இந்திய மீனவர்கள் இருந்தனர். இன்று 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மொத்தம் 97 பேர் அந்நாட்டு சிறையில் உள்ளனர். 83 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 3 பேர் விசாரணைக்காக காத்திருக்கின்றனர். தண்டனை அனுபவிப்பவர்களில் பலர் படகு உரிமையாளர்கள் அல்லது மீண்டும் மீண்டும் ஒரே குற்றத்தில் ஈடுபடுபவர்களாக உள்ளனர். இதனை கையாள்வது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.
1974 ல் அப்போது மத்தியில் இருந்த அரசு, மாநில அரசுடன் ஆலோசித்து சர்வதேச கடல் எல்லையை வரையறுத்த போது தான் இந்த பிரச்னை துவங்கியது. பிறகு 1976 ல் மீன்பிடிப்பது தொடர்பாக எல்லை வரையறை தொடர்பான கடித பரிமாற்றம் நடந்தது. எனவே 1974 மற்றும் 1976 ல் எடுக்கப்பட்ட முடிவுகளே தற்போது நிலவும் பிரச்னைகளுக்கு மூல காரணமாக உள்ளது.
இந்திய மீனவர் விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் கையாள வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.











மேலும்
-
தமிழ் கலாசாரத்தின் ஆன்மாவாக விளங்கும் கம்பராமாயணம்: கவர்னர் நெகிழ்ச்சி
-
டோங்கா தீவு அருகே நிலநடுக்கம்: ரிக்டரில் 7.1 ஆக பதிவு
-
பீகாரில் லாலுவின் காட்டாட்சி வேண்டுமா, முன்னேற்றம் தரும் அரசு வேண்டுமா; அமித் ஷா பேச்சு
-
சென்னை அணி சொதப்பல்; ராஜஸ்தான் அணி அதிரடியான தொடக்கம்
-
இந்திய கலாசாரத்தின் ஆலமரமாக திகழும் ஆர்.எஸ்.எஸ்.,: பிரதமர் மோடி புகழாரம்!
-
ஷேன் வார்னே மரணத்தில் மறைக்கப்பட்ட உண்மை: வெளியான தகவலால் பரபரப்பு