குடியுரிமை சான்றிதழ் கட்டாயம்; தேர்தலில் பெரிய மாற்றத்தை அறிவித்தார் டிரம்ப்!

10


வாஷிங்டன்: வாக்காளர் பதிவுக்கு குடியுரிமைக்கான ஆவணச் சான்று கட்டாயம் இருக்க வேண்டும் உள்ளிட்ட தேர்தல் நடைமுறையில் மாற்றங்களை கட்டாயமாக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்.


அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தினமும் அவர் வெளியிடும் புது புது அறிவிப்புகள் பரபரப்பை கிளப்பி வருகிறது. சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் பணியில் மும்முரமாக செயல்பட்டார்.

இந்நிலையில், வாக்காளர் பதிவுக்கு குடியுரிமைக்கான ஆவணச் சான்று கட்டாயம் இருக்க வேண்டும். தேர்தல் நாளுக்குள் வாக்குச்சீட்டுகளை அனைவரும் பெறுவதை உறுதி செய்தல் உள்ளிட்ட அமெரிக்க தேர்தல் நடைமுறையில் மாற்றங்களை கட்டாயமாக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்.


அதேபோல், 'கூட்டாட்சி தேர்தல்களில் வாக்களிக்கும் தகுதிக்கு பாஸ்போர்ட் போன்ற குடியுரிமை சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, சமூகப் பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் வெளியுறவுத்துறை உள்ளிட்ட கூட்டாட்சி நிறுவனங்களை பணியில் உள்ளவர்களில் குடியுரிமை சான்றிதழ் அல்லாதவர்களை அடையாளம் காண உதவும் தரவுகளை தேர்தல் அதிகாரிகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கையெழுத்திட்ட பிறகு வரும் வாரங்களில் தேர்தல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என டிரம்ப் தெரிவித்தார்.

Advertisement