அரசு மகளிர் கல்லுாரியில் முப்பெரும் விழா துவக்கம்
அரசு மகளிர் கல்லுாரியில் முப்பெரும் விழா துவக்கம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், முத்தமிழ் விழா, விளையாட்டு விழா மற்றும் கல்லுாரி ஆண்டு விழா என, முப்பெரும் விழா நேற்று துவங்கியது. ஆங்கில உதவி பேராசிரியர் கல்பனா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கீதா தலைமை வகித்தார்.
திருப்பத்துார் துாய நெஞ்சக்கல்லுாரி தமிழ்த்துறை தலைவரும், முதுகலை பார்த்திப ராஜா பேசியதாவது:
உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத வகையில், தமிழ் மொழிக்கு மட்டுமே விழா எடுக்கின்றனர். தமிழ், மொழி அல்ல. அது ஒரு வரம். தமிழ் படித்தால் அறத்தின் வழியில் நிற்பீர்கள். தமிழை போல் உலகில் எந்த மொழியும் இல்லை. இதை நான் மட்டும் சொல்லவில்லை. வெளிநாட்டில் இருந்து இங்கு வந்து, தமிழ் படித்து விட்டு போனவர்களும் சொல்லியுள்ளனர். நம் மூதாதையர்கள் பாதுகாத்து விட்டுச் சென்ற மொழியை, நாமும் காத்து வருங்கால சந்ததியினருக்கு விட்டுச்செல்ல வேண்டும். தமிழன் ஒருவன் எப்போது தமிழில் பேசுவதை, எழுதுவதை விட்டு விடுகிறானோ, அப்போது தமிழ் மொழி அழியும். எனவே, தமிழ் மொழியை காப்போம், தமிழில் பேசுவோம், எழுதுவோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, கல்லுாரியில் நடந்த கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
தமிழ்த்துறை தலைவர், இணை பேராசிரியர் சிவகாமி மொழிப்புலம் செயலர் அனிதா மற்றும் மாணவியர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
மாஜி எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியன் மறைவு: இ.பி.எஸ். இரங்கல்
-
உ.பி.,யில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்: சொல்கிறார் யோகி ஆதித்யநாத்
-
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை என ராகுல் புகார்: விதிப்படி நடக்க சபாநாயகர் அறிவுரை
-
ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
-
2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு
-
மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி