'பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை காக்க ஆசிரியர்களுக்கு சட்ட திறன் பயிற்சி அவசியம்'
'பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை காக்க ஆசிரியர்களுக்கு சட்ட திறன் பயிற்சி அவசியம்'
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் நடந்தது.
கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு பாலியல் ரீதியான குற்றங்களை தடுக்கும் வகையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அதிகளவிலான விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல வட்டார அளவில் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்து, திறன் வளர்ப்பு பயிற்சி
கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்.குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்தும் வகையில் தன்னார்வ பயிற்றுனர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
அவர்கள் மூலம் கிராம, வட்டார, மாநகராட்சி, நகர பஞ்., மற்றும் நகராட்சி ஆகிய குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குழுக்களின் முக்கியத்துவம், பங்களிப்பு குறித்து எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
இளஞ்சிறார் நீதிக் குழும தலைவர், முதன்மை நடுவர் கார்த்திக் ஆசாத் பேசுகையில், ''போக்சோ வழக்குகளில் மருத்துவ பரிசோதனைகளை விரைவில் முடித்து அறிக்கையை வழங்க வேண்டும். நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு குற்றப்
பத்திரிகை தாக்கல் செய்து, மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தவுடன் அது குறித்த விபரங்களை போலீசார், போக்சோ போர்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்,'' என்றார்.
மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி., சாந்தலிங்கம், கூடுதல் அரசு குற்ற வழக்கு தொடர்பு துறை உதவி இயக்குனர் ரமேஷ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சக்திசுபாசினி மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
மாஜி எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியன் மறைவு: இ.பி.எஸ். இரங்கல்
-
உ.பி.,யில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்: சொல்கிறார் யோகி ஆதித்யநாத்
-
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை என ராகுல் புகார்: விதிப்படி நடக்க சபாநாயகர் அறிவுரை
-
ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
-
2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு
-
மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி