ஒயர் திருடிய பெண்உட்பட 4 பேர் கைது


ஒயர் திருடிய பெண்உட்பட 4 பேர் கைது


புன்செய்புளியம்பட்டி:புன்செய் புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட காவிலிபாளையம், அய்யம்பாளையம், பொங்கியானுார் கிராமங்களில், விவசாய தோட்டத்தில் மோட்டார் மற்றும் தனியார் நிறுவனங்களில் காப்பர் மின் ஒயர் திருட்டு அடிக்கடி நடந்தது. புகாரின்படி புளியம்பட்டி போலீசார் கும்பலை தேடி வந்தனர். இது தொடர்பாக புன்செய்புளியம்பட்டி, குரும்பபாளையத்தை சேர்ந்த ராணி, 35, ரவி, 41, அய்யாசாமி, 28, மயில்சாமி, 41, ஆகியோரை, போலீசார் நேற்று கைது
செய்தனர்.

Advertisement