ஆம்னி பஸ் பறிமுதல்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை, டோல்கேட் அருகே மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கேரளாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற அருணாச்சல பிரதேச பதிவெண் கொண்ட தனியார் சொகுசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தமிழக அரசுக்கு சாலை வரி செலுத்தாமல், 'டூரிஸ்ட்' பர்மிட்டில் 'ரூட்' பஸ்சாக இயக்கி வருவது தெரிய வந்தது.

அதன்பேரில் பஸ்சை பறிமுதல் செய்து, உளுந்துார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகள், மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement