கண்காட்சி போட்டி: இந்தியா வருகிறார் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி

புதுடில்லி: அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி, வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிற கண்காட்சிப் போட்டிக்காக இந்தியா வருகை தருகிறார்.
கால்பந்து உலகில் புகழ்பெற்றவரும் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸி, வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள கால்பந்து கண்காட்சி போட்டியில் கலந்து கொள்வதற்காக, 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வருகிறார்.
மெஸ்ஸி, கடந்த 2011-செப்டம்பர் மாதம் கோல்கட்டாவில் நடந்த வெனிசுலாவுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் விளையாடினார். சால்ட் லேக் ஸ்டேடியத்தில் நடந்த அந்த போட்டியில் அர்ஜென்டினா அணி, 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் கேரளாவில் நடைபெறும் கண்காட்சிப் போட்டியின் போது, லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது அர்ஜென்டினா அணி வீரர்களின் ஆட்டத்தைப் பார்க்க , இந்தியாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் வாய்ப்பைப் பெற உள்ளனர்.
லியோனல் மெஸ்ஸி உட்பட அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணி கலந்து கொள்ளும் கண்காட்சி போட்டி வரும் அக்டோபரில் நடக்கும் என்று ஹச்.எஸ்.பி.சி- இந்தியா அறிவித்துள்ளது.
மேலும்
-
மியான்மர் புறப்பட்டது 80 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை : வெளியுறவு அமைச்சர் தகவல்
-
காமெடியன் குணால் காம்ராவுக்கு நெருக்கடி; மேலும் 3 வழக்குகள் பதிவு
-
நிறுவன உரிமையாளரிடம் ரூ.6.5 கோடி மோசடி; இணைய மோசடி கும்பல் துணிகரம்
-
டில்லியில் யாரை சந்தித்தார் செங்கோட்டையன்?
-
ஆவணங்களை பகிர்ந்தால் ஆபத்து வரும்; பல கோடி ரூபாய் வரி பாக்கி நோட்டீஸ் வந்ததால் அப்பாவிகள் அதிர்ச்சி!
-
நிலநடுக்கத்திற்கு மத்தியில் பூத்த மலர்; சாலையில் பெண்ணுக்கு பிரசவம்