அத்தனுார் பெருமாள் கோவில்மலையில் பற்றி எரிந்த காட்டு தீ



அத்தனுார் பெருமாள் கோவில்மலையில் பற்றி எரிந்த காட்டு தீ

வெண்ணந்துார்:வெண்ணந்துார் ஒன்றியம், அத்தனுார் டவுன் பஞ்சாயத்தில் பிரசித்தி பெற்ற அத்தனுார் அம்மன் கோவில் உள்ளது. அதன் அருகே உள்ள மலையில் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கோடைகாலம் துவங்குவதற்கு முன்பே கடும் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில், சுற்றுவட்டார பகுதியில் உள்ள மலைப்பகுதியில் காய்ந்த மரம், செடி, கொடிகளில் அவ்வப்போது தீப்பற்றி எரியும் சம்பவம் நடந்து வருகிறது.
அதுபோல், நேற்று மாலை, அத்தனுார் அம்மன் கோவில் அருகே உள்ள பெருமாள் கோவில் மலையில் காட்டு தீ பற்றியது. இந்த தீ மளமளவென பரவி மலையின் பாதி பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் எரிந்தன. தீப்பிடித்து எரிந்த மலையின் அடிவார பகுதியில் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இதனால், சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பதற்றத்துடன் அந்த பகுதியை கடந்து சென்றனர்.

Advertisement