இறுதி கட்டத்தில் மேம்பால பணி
இறுதி கட்டத்தில் மேம்பால பணி
பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் பகுதியில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், சென்னை--கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தில், 200 கோடி ரூபாயில் மேம்பால கட்டுமான பணி, கடந்த மூன்றாண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த மேம்பாலம், ஆலாம்பாளையத்தில் துவங்கி, பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பிரிவு சாலைய வழியாக வந்து, ஒன்பதாம்படி பகுதியில் முடிவடைகிறது. இந்த மேம்பாலம், மூன்று கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்படுகிறது. மேம்பாலத்தின் கட்டுமான பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டன.
ஓரிரு மாதங்களாக, மேம்பாலத்தில் மின்விளக்கு, மழைநீர் செல்ல பைப் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, இறுதிக்கட்ட பணியாக மேம்பாலத்தின் சாலை பகுதியில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்படுகிறது. இதையடுத்து வர்ணம் பூசும் பணி நடைபெறும். இப்பணிகள் முடிந்தவுடன் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு பாலம் திறக்கப்படும். இதனால் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறைந்துவிடும் என, மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
மேலும்
-
மாஜி எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியன் மறைவு: இ.பி.எஸ். இரங்கல்
-
உ.பி.,யில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்: சொல்கிறார் யோகி ஆதித்யநாத்
-
லோக்சபாவில் பேச அனுமதிக்கவில்லை என ராகுல் புகார்: விதிப்படி நடக்க சபாநாயகர் அறிவுரை
-
ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
-
2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு
-
மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி