சென்னை, மதுரையில் ஜூனியர் உலக ஹாக்கி

சென்னை: ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் சென்னை, மதுரையில் நடக்க உள்ளன.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஜூனியர் அணிகளுக்கான உலக கோப்பை தொடர் நடத்தப்படுகிறது. இதன் 14வது தொடர் சென்னை, மதுரையில் நடக்க உள்ளது. வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடக்கும் இத்தொடரில் முதன் முறையாக 24 அணிகள் பங்கேற்கின்றன.
யார் அதிகம்
ஜூனியர் தொடரில் ஜெர்மனி அதிகபட்சம் 7 முறை கோப்பை வென்றது. அடுத்து இந்தியா (2001, 2016), அர்ஜென்டினா (2005, 2021) தலா 2 முறை சாம்பியன் ஆகின. ஆஸ்திரேலியா (1997), பாகிஸ்தான் (1979) தலா ஒரு முறை கோப்பை வென்றன.
மூன்றாவது முறை
இந்தியாவில் தற்போது மூன்றாவது முறையாக நடக்க உள்ளது. முன்னதாக 2016ல் இந்தியா சாம்பியன் ஆனது. 2021ல் நான்காவது இடம் பிடித்தது.
ஹாக்கி இந்தியா அமைப்பில் தலைவர் திலீப் டிர்கே கூறுகையில்,'' ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023ல் சென்னையில் நடந்தது. இம்முறை சென்னை, மதுரை என இரு நகரங்களில் ஜூனியர் உலக கோப்பை போட்டிகள் நடக்கவுள்ளன. முதன் முறையாக புதிய நகரத்துக்கு போட்டியை கொண்டு செல்வது மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றார்.

மேலும்
-
கடன் தொல்லையால் அவதி: சொந்த வீட்டில் கொள்ளை நாடகமாடி சிக்கிய நபர்
-
நிதி முறைகேடு குற்றம் உறுதி; பிரான்ஸ் வலதுசாரி கட்சி பெண் தலைவருக்கு தடை
-
ஜிப்லியால் முடங்கிய சாட்ஜிபிடி: சி.இ.ஓ., விடுத்த அன்பு கட்டளை!
-
ஜிப்லியில் இணைந்தார் இ.பி.எஸ்; காலத்தால் அழியாத கலையுடன் கலக்கிறேன் என பதிவு
-
சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சல் தலைவி சுட்டுக்கொலை
-
நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகை: விவசாயிகள் 400 பேர் கைது