மாரடோனாவின் மரண வேதனை...

பியுனஸ் ஏர்ஸ்: கால்பந்து ஜாம்பவான் அர்ஜென்டினாவின் மறைந்த டீகோ மாரடோனா. உலக கோப்பை தொடரில் 4 முறை பங்கேற்றார். 1986ல் உலக கோப்பை வென்று தந்தார். மூளையில் ஏற்பட்ட ரத்த உறைதல் காரணமாக 2020ல் ஆப்பரேஷன் செய்யப்பட்டது. 8 நாளுக்குப் பின் வீடு திரும்பிய இவர், மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
எனினும் கடைசி நேரத்தில் மாரடோனாவுக்கு சரியான மருத்துவ உதவிகள் தரப்படவில்லை என புகார் எழுந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இதில்,' மாரடோனா இறந்த போது, வயிறு, முகம் வீங்கி இருந்தது,'' என பலர் தெரிவித்தனர்.
இதனிடையே மாரடோனா போஸ்ட் மார்ட்டம் அறிக்கையை, தடயவியல் இயக்குனர் கார்லஸ் கேசினெல்லி வெளியிட்டார். இதில் கூறப்பட்டு இருப்பது:
மாரடோனாவை மருத்துமனையில் வைத்து சிகிச்சை தந்திருக்க வேண்டும். அவரது இதயம் முழுவதும் கொழுப்பு, ரத்த கட்டிகளால் மூடப்பட்டு இருந்தன. கடைசி நேரத்தில் அவர் எந்தளவுக்கு வேதனையால் துடித்த இருப்பார் என்பதை இது உணர்த்தியது. தவிர நுரையீரலில் நீர் நிறைந்து இருந்தது. இதனால் ஏற்பட்ட வீக்கம் காரணமாக, இதயம் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், முன்னதாக இதை கவனித்து இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement