திருமணமான இரு மாதத்தில் இளம்பெண் விபரீத முடிவு
பேரிகை: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே அத்திமுகத்தை சேர்ந்தவர் விவசாயி பாலாஜி. இவருக்கும், கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகே போத்தன ஒசஹள்ளியை சேர்ந்த பிருத்திகா, 20, என்பவருக்கும் கடந்த மாதம், 1 ம் தேதி திருமணம் நடந்தது.
கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தியடைந்த பிருத்திகா, நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்ட உறவினர்கள், ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியில் பிருத்திகா உயிரிழந்தார். அவரது தாய் கீதா, 40, கொடுத்த புகார்படி, ஓசூர் ஏ.எஸ்.பி., அக்ஷய் அணில் வாகரே வழக்குப்பதிவு செய்தார். திருமணமான இரு மாதங்களில் பெண் தற்கொலை செய்ததால், ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா விசாரிக்கிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதுரையில் போலீஸ் என்கவுன்டர்; பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக்கொலை
-
மோசமான நடத்தை: பிரிட்டன் பிரைமார்க் நிறுவன தலைமை நிர்வாகி பால் மர்ச்சண்ட் ராஜினாமா
-
வக்பு சட்ட திருத்தத்தை எம்.பி.,க்கள் ஆதரிக்கணும்: பிஷப் கூட்டமைப்பு வேண்டுகோள்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
போதை பொருள் வர்த்தகத்திற்கு எதிரான அரசின் இடைவிடாத வேட்டை தொடரும்; உள்துறை அமைச்சர் அமித் ஷா
Advertisement
Advertisement