ரமேஷ் எம்.எல்.ஏ., வுக்கு முன்னாள் அமைச்சர் வாழ்த்து

புதுச்சேரி: பிறந்தநாள் விழா கொண்டாடிய, கதிர்காமம் தொகுதி எம்.எல்.ஏ., ரமேஷிற்கு முன்னாள் அமைச்சர் தியாகராஜன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரவித்தார்.

அகில இந்திய என்.ஆர்.காங்., இளைஞரணி தலைவரும், கதிர்காமம் தொகுதி எம்.எல்.ஏ., ரமேஷ் பிறந்த நாள் விழா கொண்டாடினார்.

அவரது பிறந்தநாள் விழாவில், முன்னாள் அமைச்சர் தியாகராஜன் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதேபோல், என்.ஆர்.காங்., இளைஞரணி மாநில பொருளாளர் கபாலி, தொகுதி பொறுப்பாளர் செந்தில், குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கதிர்காமம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement