'நம்ம மண்டை தான் உருளும்!'

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., சார்பில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
தி.மு.க.,வினர் நடத்திய ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு முன்பாக, அக்கட்சியினர் மேடையில் அமர்ந்து, அரசியல் பேசினர். அதேபோல், பா.ஜ., நடத்திய பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு முன்னதாக, அக்கட்சியினரும் மேடையில் அமர்ந்து, அரசியல் பேசினர்.
பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸ்காரர் ஒருவர், 'கலை நிகழ்ச்சிக்குன்னு அனுமதி வாங்கிவிட்டு, கட்சி பொது கூட்டம் மாதிரி, மேடையில் பேனர் கட்டி கொண்டு, மற்ற கட்சிகளை தாக்கி பேசுகின்றனரே... கோவில் திருவிழாவில் அரசியல் பேசுவதால், பொது அமைதி பாதிக்காதா... இதுக்கு நம்ம அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்கணும்பா...' எனக் கூற, 'ஆமாம்பா... இங்க ஏதாவது அடிதடி நடந்துட்டா, நம்ம மண்டை தானே உருளும்...' என, அலுத்துக் கொண்டார்.

மேலும்
-
கடன் தொல்லையால் அவதி: சொந்த வீட்டில் கொள்ளை நாடகமாடி சிக்கிய நபர்
-
நிதி முறைகேடு குற்றம் உறுதி; பிரான்ஸ் வலதுசாரி கட்சி பெண் தலைவருக்கு தடை
-
ஜிப்லியால் முடங்கிய சாட்ஜிபிடி: சி.இ.ஓ., விடுத்த அன்பு கட்டளை!
-
ஜிப்லியில் இணைந்தார் இ.பி.எஸ்; காலத்தால் அழியாத கலையுடன் கலக்கிறேன் என பதிவு
-
சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சல் தலைவி சுட்டுக்கொலை
-
நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகை: விவசாயிகள் 400 பேர் கைது