புதுச்சேரி, காரைக்காலில் நாளை இ.எஸ்.ஐ.,குறைதீர்வு கூட்டம்

புதுச்சேரி: தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில், நாளை 27ம் தேதி, குறைதீர்வு கூட்டம் நடக்கிறது.

புதுச்சேரி - கடலுார் மெயின் ரோடு, காட்டுக்குப்பம், சர்வோ பேக்கேஜிங் என்ற இடத்தில், நாளை 27ம் தேதி, காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை குறைதீர்வு கூட்டம் நடக்கிறது. அதே போல, காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள இ.எஸ்.ஐ., கிளை அலுவலகத்தில், கூட்டம் நடக்கிறது.

கூட்டத்தில், தொழிலா ளர்கள், தொழில் முனை வோர்கள், பயனாளிகள் கலந்து கொண்டு, இ.எஸ்.ஐ., மற்றும் இ.பி.எப்.ஓ. சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை தெரிவிக்கலாம். தொழிலாளர்களின் மனுவை, பரிசீலனை செய்து, உடனடியாக தீர்வு காணப்படும். இவ்வாறு, மண்டல இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Advertisement