238ம் இடத்துக்கு தள்ளப்பட்ட புதுச்சேரி பொறியியல் கல்லுாரி முதல்வர் ரங்கசாமி அதிருப்தி 

புதுச்சேரி : சட்டசபை கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்.

கல்யாணசுந்தரம் (பா.ஜ.,): புதுச்சேரி இன்ஜினியரிங் கல்லுாரி தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது.

ஆனால், 8ம் இடத்தில் இருந்த இக்கல்லுாரி இன்று 238 இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்லுாரியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும். துணைவேந்தருக்கு அதிகாரமா, அமைச்சருக்கு அதிகாரமா என்ற அதிகார போட்டி தான் நடந்து கொண்டு இருக்கிறது. இக்கல்லுாரியை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

186 ஏக்கர் விவசாய நிலத்தை அப்பகுதி மக்கள் இக்கல்லுாரிக்கு கொடுத்துள்ளனர். ஆனால் அவர்களுக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கவில்லை.

முதல்வர் ரங்கசாமி: இது உண்மை தான். வரும் காலத்தில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தினை சிறந்த பல்கலையாக மாற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அங்கு என்ன பிரச்னை உள்ளது என்பதை அரசு முழுமையாக கண்டறிந்து தீர்க்கப்படும்.

Advertisement