பணிமனை முன் வாயில் கூட்டம் 

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழக புறநகர் கிளை பணிமனை முன்பு சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் வாயில் விளக்க கூட்டம் நடந்தது.

அகில இந்திய மோட்டார் வாகன தொழிலாளர்கள் சம்மேளம் சார்பில் புது டெல்லியில் மார்ச் 24ல் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடந்தது. இது குறித்த விளக்க கூட்டம் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் நடந்தது.

காரைக்குடி மண்டல மத்திய சங்கத்தலைவர் ராஜன் தலைமை வகித்தார். துணை பொதுச் செயலாளர் லோகநாதன், மத்திய சங்க நிர்வாகிகள் பாஸ்கரன், செல்லக்குண்டு, பொருளாளர் தியாகராஜன் உட்பட பலர் பேசினர்.

மத்திய சங்கம் காரைக்குடி மண்டல பொதுச்செயலாளர் தெய்வீரபாண்டியன் நிறைவுரையாற்றினார்.

மோட்டார் தொழிலை கார்ப்பரேட் மயமாக்கும் மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளை வாபஸ் பெற வேண்டும். தொழிலாளர்கள் உரிமைகளை பறிக்கும் 4 சட்ட தொகுப்புகளை வாபஸ் பெற வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Advertisement