ராமசாமி துவக்கப்பள்ளி ஆண்டு விழா

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த முடப்பள்ளி அரசு உதவி பெறும் ராமசாமி துவக்கப் பள்ளியில், 98வது ஆண்டு விழா நடந்தது.

தாளாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பத்மாவதி வரவேற்றார். ஆசிரியைகள் கலைவாணி, கிருஷ்ணவேணி வரவேற்றனர்.

தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி, நெய்வேலி தொ.மு.ச., தலைவர் திருமாவளவன், தொண்டரணி மணிவண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. சுந்தரம், வெற்றிவேல், தட்சிணாமூர்த்தி, கலைமணி, சிதம்பரம், இளஞ்செழியன், வடிவேல், திருவேங்கடசெல்வன், அறிவழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement