விவசாயிக்கு மிரட்டல்  வி.ஏ.ஓ., மீது வழக்கு 

சிதம்பரம், : விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த வி.ஏ.ஓ., உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

சிதம்பரம் அடுத்த பெராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்,45; விவசாயியான இவர், அதே பகுதியில் 2023ம் ஆண்டு 43 சென்ட் இடத்தை தனது பெயருக்கு கிரயம் செய்தார்.

இந்த இடத்தை தங்கள் பெயருக்கு கிரயம் செய்து தருமாறு செந்தில் வீட்டிற்கு சென்று அவரை வல்லம்படுகை வி.ஏ.ஓ., கரிகாலன், உறவினர்கள் ஆனந்தன், வில்சன், கலியமூர்த்தி ஆகியோர் நேற்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிந்து கரிகாலன் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

Advertisement